இந்தியா

கணித தேர்வு ரத்தாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவரால் பரபரப்பு

Published On 2022-09-13 05:27 GMT   |   Update On 2022-09-13 05:27 GMT
  • மிரட்டல் ஆதாரமாக மாணவனின் தந்தையின் மொபைல் போனில் இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் நள்ளிரவு சோதனைகள் மேற்கொண்டனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளிக்கு அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். செப்டம்பர் 16-ம் தேதி பள்ளியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கணித தேர்வை ரத்து செய்வதற்காக மாணவர் மிரட்டல் விடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மிரட்டல் ஆதாரமாக மாணவனின் தந்தையின் மொபைல் போனில் இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அமிர்தசரஸில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் அப்பகுதியில் பீதியையும் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.

கடந்த 7-ம் தேதி நகரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக புகாரளித்தது. பின்னர் அது மூன்று மாணவர்களின் செயல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் நள்ளிரவு சோதனைகள் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News