இந்தியா

சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்- ஏழுமலையான் காப்பாற்றுவார் என பேட்டி

Published On 2023-12-01 05:09 GMT   |   Update On 2023-12-01 05:09 GMT
  • சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
  • நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

திருப்பதி:

ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் ஜாமீனில் வெளிய வந்தார். சந்திரபாபு நாயுடு நேற்று தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் திருப்பதி மலைக்கு வந்த சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

ஏழுமலையான் காலடியில் பிறந்து படிப்படியாக வளர்ந்தவன் நான். கஷ்டம் வரும் காலங்களில் காப்பாற்றுவார்.


அலிபிரியில் தன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது ஏழுமலையான் தான் என்னை காப்பாற்றினார். நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

உலகில் இந்தியா முதல் இடத்திலும் தெலுங்கு இனம் உலகின் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் ஆற்றலை தர வேண்டும் என சாமியிடம் வேண்டிக் கொண்டேன். தனது செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதியில் நேற்று 58,278 பேர் தரிசனம் செய்தனர். 17,220 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.




Tags:    

Similar News