- சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.
- சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது.
தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில் ஸ்மார்ட் போன்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில் குழந்தை ஒன்று உணவை போன் என தவறாக நினைத்து காதில் வைக்கும் காட்சி உள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் நமது முன்னுரிமைகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன என்று ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது என்பதை அப்பட்டமாக நினைவூட்டுவதாகவும், நமது நடத்தை மற்றும் வளர்ச்சியில் இத்தகைய சாதனங்களின் தாக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.