இந்தியா

உத்தரபிரதேசத்தில் 3 இடங்களில் பிரசாரம்: ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

Published On 2024-05-05 07:13 GMT   |   Update On 2024-05-05 07:13 GMT
  • தரிசனத்தை முடித்த பிறகு மோடி அயோத்தியில் பிரமாண்ட ரோடுஷோவில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
  • பிரதமர் மோடி ஒடிசாவில் நாளை பெர்காம்பூர், நபராங்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

லக்னோ:

பாராளுமன்றத்துக்கு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 3-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தலைவர்கள் இந்த தொகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 8 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 8 இடங்களிலும் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

3-வது கட்டத்தில் 10 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று 3 இடங்களில் பிரசாரதில் ஈடுபடுகிறார்.

சமாஜ்வாடி ஆதிக்கம் நிறைந்த இட்டவா மாவட்டம் புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே அருகே காக்ராய் பக்கா தால் பகுதியில் இருந்து இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதன்பிறகு பிற்பகலில் சீதாப்பூர் மாவட்டம் வார்கானில் உள்ள அவாத்சுகர் மில் அருகே உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தேர்தல் பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி இன்று மாலை அயோத்தி செல்கிறார். இரவு 7 மணிக்கு அவர் ராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.

தரிசனத்தை முடித்த பிறகு மோடி அயோத்தியில் பிரமாண்ட ரோடுஷோவில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அயோத்தியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறப்பட்டு செல்கிறார். அங்குள்ள கவர்னர் மாளிகையில் இரவில் அவர் தங்குகிறார்.

பிரதமர் மோடி ஒடிசாவில் நாளை பெர்காம்பூர், நபராங்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இந்த 2 தொகுதிகளிலும் 4-வது கட்டமாக மே 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களாகும்.

Tags:    

Similar News