இந்தியா (National)

திருப்பதி லட்டு விவகாரம்- ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார்

Published On 2024-09-22 06:54 GMT   |   Update On 2024-09-22 06:54 GMT
  • கலப்பட நெய் விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
  • இந்துக்களின் உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கலந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த வக்கீல் கருணாசாகர் சைதாபாத் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கலப்பட நெய் விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். திருப்பதி கோவிலின் புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும், இந்துக்களின் உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News