இந்தியா (National)

நிலச்சரிவில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் - ராகுல் காந்தி

Published On 2024-07-30 04:00 GMT   |   Update On 2024-07-30 04:06 GMT
  • கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன்.
  • மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கேரள மாநிலம் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளன. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவார்கள் என்று நம்புகிறேன். கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

நானும் மத்திய அமச்சர்களிடம் பேசி, தேவையான உதவிகளை வழங்க கோரிக்கை விடுக்கிறேன். மீட்பு பணிகளில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த பணியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

Tags:    

Similar News