இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இருந்து 2 எம்.பி.க்கள் விலக முடிவு

Published On 2024-02-21 09:09 GMT   |   Update On 2024-02-21 09:09 GMT
  • ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் உள்ள எம்.பி.க்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. வெமிரட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் நெல்லூர் எம்.பி. அட்லா பிரபாகர் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் ஆளூர் தொகுதியில் போட்டியிட்டு தொழிலாளர் துறை அமைச்சராக உள்ள கும்மனூர் ஜெயராம் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு கர்னூல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கும்மனூர் ஜெயராம் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

ஜெயராம் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் மாற்றுக் கட்சிக்கு தாவுவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News