இந்தியா

கேரளாவில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2023-07-06 04:56 GMT   |   Update On 2023-07-06 04:56 GMT
  • கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தமிழக எல்லைகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவ தொடங்கியது. பல்வேறு வித காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தமிழக எல்லைகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தாளப்புழா பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்பு மேல் சிகிச்சைக்காக மேப்பாடி விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிர் இழந்தார்.

கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News