இந்தியா

போராட்டம் நடத்திய பெண்களை உயிருடன் புதைத்த கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ

Published On 2024-07-22 05:54 GMT   |   Update On 2024-07-22 05:54 GMT
  • இரு பெண்களின் மீது கொட்டப்பட்டதால் கிட்டதட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர்.
  • வீடியாவை பகிர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றன.

 மத்தியப்  பிரதேசத்தில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் புதையும் அளவுக்கு டிரக் மூலம் அவர்கள்மீது மண் கொட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ரேவா  மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோரோட் என்ற கிராமத்தில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்று இரு பெண்களுக்கு உறவினர்களுடன் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அந்த நிலத்தில் உறவினர்கள் சாலை அமைக்க முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் சரளை மண்ணை சுமந்து நின்ற டிரக்கின் முன் அமர்ந்து இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தியா நிலையில் அந்த டிரக்கில் இருந்த மண் இரு பெண்களின் மீது கொட்டப்பட்டதால் கிட்டதட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர்.

உடனே அருகில் இருந்த கிராம வாசிகள் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்களை  மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய்யப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியாவை பகிர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றன. 

Tags:    

Similar News