இந்தியா (National)

பட்டியலின உள் ஒதுக்கீடு செல்லும்.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி

Published On 2024-10-05 03:29 GMT   |   Update On 2024-10-05 03:29 GMT
  • தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத இட ஒதுக்கீடும் இதில் அடங்கும்.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையிலிருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் இந்த ஒருமித்த தீர்ப்பை வழங்கி இருந்தனர். தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத இட ஒதுக்கீடும் இதில் அடங்கும் .எனவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தன.

ஆனால் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில், எந்தத் தவறும் இல்லை இது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்று கூறி தனது தீர்ப்பை உறுதிப்படுத்தி மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

Tags:    

Similar News