இந்தியா (National)

லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு.. தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது - ஜெகன் மோகன்

Published On 2024-09-20 10:57 GMT   |   Update On 2024-09-20 11:38 GMT
  • விநியோகஸ்தர்கள் NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும்.
  • எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்துள்ளோம்.

உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம்.

திருப்பதி கோவிலில் வழங்கும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்து மத நம்பிக்கைகளின் படி, மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்ற எண்ணம் இந்து மத பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கட்டதாக கூறப்படும் புகார்களை ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக மறுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "டெண்டர் செயல்முறை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆனால், தகுதி அளவுகோல் பல தசாப்தங்களாக மாறவே இல்லை. விநியோகஸ்தர்கள் NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும்."

"TTD நெய்யிலிருந்து மாதிரிகளை சேகரிக்கிறது, மேலும் சான்றிதழைப் பெற்ற தயாரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது. எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்துள்ளோம்," என தெரிவித்தார்.

Tags:    

Similar News