இந்தியா

சத்தீஸ்கரில் உள்ள சுக்மாவில் இரண்டு நக்சலைட்டுகள் காவல்துறையிடம் சரண்

Published On 2023-08-26 17:20 GMT   |   Update On 2023-08-26 17:20 GMT
  • இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
  • மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி இருவருக்கும் மறுவாழ்வு அளிக்க முடிவு.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா என்ற பகுதயில், சட்டவிரோத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு உறுப்பினர் உள்பட இரண்டு நக்சலைட்டுகள் இன்று சரணடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த தேவா மற்றும் எர்ரா ஆகிய இருவரும், "மனிதாபிமானமற்ற மற்றும் வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், எனவே ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்துள்ளதாகவும்" போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தேவா ஒரு போராளி படைப்பிரிவின் உறுப்பினராகவும், எர்ரா போராளிகளின் ஒரு பிரிவாகவும், சட்டவிரோதமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) கொரோஷேகுடா புரட்சிகர மக்கள் கவுன்சிலின் (ஆர்பிசி) விவசாயக் குழு உறுப்பினராகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்நிலையில், மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி தேவாவுக்கும், எர்ராவுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று மேலும் கூறினர்.

Tags:    

Similar News