மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
- உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய தமனிகளில் உள்ள அடைப்பை கண்டறியும் சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், இன்று காலை, "உத்தவ் தாக்கரே, சர் ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உங்கள் ஆசீர்வாதத்துடன் அவர் நன்றாக இருக்கிறார். மேலும் அவர் பணியாற்றவும் மக்களுக்கு சேவை செய்யவும் தயாராக இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.