மைக்ரோசாப்ட் குளறுபடி- மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்
- மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
- குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை.
மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை.
குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய பங்குச்சந்தை மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கியதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.