அசாமில் வாக்கு இயந்திரத்துடன் சென்ற வாகனம் ஆற்றில் மூழ்கியதால் பரபரப்பு... வீடியோ
- வாக்கு இயந்திரம் வாகனத்துடன் படகில் எடுத்துச் சென்றபோது திடீரென வெள்ளம் அதிகரித்தது.
- படகு கவிழ்ந்த நிலையில் வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்தியா முழுவதும் இன்று 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் லகிம்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
சதியா என்ற இடத்தில் உள்ள அமர்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்கு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் மாற்றும் மெஷின் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஊருக்கு வரவேண்டுமென்றால் ஆற்றைக்கடந்து வரவேண்டும். அதிகாரிகள் வாக்கு இயந்திரத்திடன் சொகுசு வாகனத்தில் ஆற்றங்கரையோரத்திற்கு வந்தனர். அந்த வாகனத்தை படகு ஒன்று ஏற்றிச் சென்றது. ஆற்றில் திடீரென வெள்ளம் அதிகரிக்க படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த வாகனமும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
உடனடியாக அதிகாரிகள் மற்றும் வாக்கு இயந்திரம் பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் வாக்கு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள் வாகனத்துடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.