இந்தியா

பா.ஜ.க.வில் இணைந்தார் லால் பகதூர் சாஸ்திரி பேரன்

Published On 2024-02-14 09:08 GMT   |   Update On 2024-02-14 10:16 GMT
  • விபாகர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
  • இவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதில் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா, முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரனான விபாகர் சாஸ்திரியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய விபாகர் சாஸ்திரி, உத்தர பிரதேச துணை முதல் மந்திரி பிரஜேஷ் பதக் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்தார்.

Tags:    

Similar News