இந்தியா

"2047-ல் வளர்ச்சி இந்தியா" ஒவ்வொரு இந்தியரின் லட்சியம்: பிரதமர் மோடி

Published On 2024-07-27 09:26 GMT   |   Update On 2024-07-27 10:36 GMT
  • லட்சியத்தை எட்ட மாநிலங்கள் மாநிலங்கள் செயல்பட முடியும்.
  • சர்வதேச முதலீடுகளுக்கு உகந்ததாக நமது கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

மோடி 3-வது முறையாக பிரதமாக பதவி ஏற்ற நிலையில் முதல் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். ஆனால், மைக் ஆஃப் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார்.

இதற்கிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "2047-வளர்ச்சி இந்தியா (Viksit Bharat@2047) என்பது ஒவ்வொரு இந்தியனின் லட்சியம். இந்த லட்சியத்தை எட்ட மாநிலங்கள் செயல்பட முடியும். இந்தியா இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சர்வதேச முதலீடுகளுக்கு உகந்ததாக நமது கொள்கைகளை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ் குமாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Tags:    

Similar News