இந்தியா

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்

Published On 2022-11-04 19:52 GMT   |   Update On 2022-11-04 19:52 GMT
  • டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
  • டெல்லியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

புதுடெல்லி:

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி, நவம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 7-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Tags:    

Similar News