இந்தியா

ரூ.2 ஆயிரம் நோட்டு மாற்றுவதில் இதுவரை பெரிய சிக்கல் எதுவுமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி

Published On 2023-05-24 07:42 GMT   |   Update On 2023-05-24 09:32 GMT
  • 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான முழு செயல் முறையும் இடையூறு இல்லாததாக இருக்கும்.
  • வட்டி விகித உயர்வை நிறுத்துவது என் கையில் இல்லை. அது கள நிலவரத்தை பொறுத்தது.

புதுடெல்லி:

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்ப பெறும் பணியை ரிசர்வ் வங்கி நேற்று தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் இதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான முழு செயல் முறையும் இடையூறு இல்லாததாக இருக்கும். ரிசர்வ் வங்கி நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.

வட்டி விகித உயர்வை நிறுத்துவது என் கையில் இல்லை. அது கள நிலவரத்தை பொறுத்தது.

இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

Tags:    

Similar News