இந்தியா

மேற்குவங்கம்: கடும் எதிர்ப்பால் மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக வேட்பாளர்

Published On 2024-03-03 08:54 GMT   |   Update On 2024-03-03 08:54 GMT
  • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், "என்னை நம்பி அசன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில காரணங்களால் என்னால் அசன்சோல் தொகுதி தேர்தலில் போட்டியிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதில் மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

"பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார். அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அதனால் தான், பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தனது X பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், போஜ்புரி நடிகரான பவான் சிங் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.


Tags:    

Similar News