இந்தியா

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் மேற்கு வங்க கவர்னர்

Published On 2024-09-07 01:16 GMT   |   Update On 2024-09-07 01:16 GMT
  • மேற்கு வங்க சட்டசபையில் பலாத்கார தடுப்பு மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவை மாநில கவர்னர் ஆனந்த் போஸ் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.

இதையடுத்து, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற மேற்கு வங்க சிறப்பு சட்டசபை கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து (குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி) பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News