இந்தியா (National)

"வெள்ளை டி-சர்ட்" இளைஞர்களுக்கு என்ன செய்தி சொல்லும் என ராகுலுக்கு தெரியும் - ஸ்மிருதி இரானி

Published On 2024-08-29 14:41 GMT   |   Update On 2024-08-29 14:41 GMT
  • வித்தியாசமான அரசியலை வெளிப்படுத்துகின்றன என்று தவறாகக் கருதி விடக்கூடாது.
  • கோவில் பயணங்களால் ராகுல் காந்திக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி "வெற்றியை" அனுபவித்துவிட்டதாக நம்புவதாகவும், இப்போது அரசியலில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி சமீபத்திய போட்காஸ்ட்-இல் பேசும் போது, "அவர் (ராகுல் காந்தி) ஜாதியைப் பற்றி பேசும்போது, பாராளுமன்றத்தில் வெள்ளை டி-சர்ட் அணிந்தால், இளைஞர்களுக்கு அது என்ன மாதிரியான செய்தியை அனுப்புகிறது என்பதை அவர் நன்கு அறிவார்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பிட்ட மக்கள்தொகையை குறிவைத்து ராகுல் காந்தி நகர்வுகளை கணக்கிட்டு தான் மேற்கொள்கிறார். அவரது செயல்கள் நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அல்லது முதிர்ச்சியற்றதாகவோ தெரிந்தாலும்-அவை வித்தியாசமான அரசியலைத் தான் வெளிப்படுத்துகின்றன என்று நாம் தவறாகக் கருதி விடக்கூடாது."

"கோவில் பயணங்களால் ராகுல் காந்திக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இது கேலிக்கூத்தாகவே மாறியது. சிலர் அவரது நடவடிக்கையை ஏமாற்றுவதாகத் தான் பார்த்தனர். இந்த உத்தி பலனளிக்காததால், சாதியப் பிரச்சினைகளை வைத்து ஆதாயம் தேட நினைக்கின்றனர்," என்றார்.

Tags:    

Similar News