இந்தியா

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப்

பணமதிப்பிழப்பு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

Published On 2022-11-09 03:00 GMT   |   Update On 2022-11-09 03:00 GMT
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.
  • பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

புதுடெல்லி :

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 6-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பணமதிப்பிழப்பு மூலமாக சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய, திட்டமிட்ட கொள்ளை இதே நாளில் அரங்கேற்றப்பட்டது. 6 ஆண்டுகள் ஆன நிலையில், பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஏனென்றால், நாம் என்ன சாதித்தோம், என்ன இழந்தோம் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

கருப்பு பணம் வெளிவரும் என்று சொன்னீர்கள். ஆனால், வறுமைதான் வந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

மொத்தத்தில், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காவிய தோல்வி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News