வங்காளதேசம் எல்லையை போன்று மியான்மர் எல்லையும் பாதுகாக்கப்படும்: அமித் ஷா
- மியான்மரில் ராணுவத்திற்கும் இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
- இதனால் தஞ்சம் கேட்டு பலர் அசாம் மாநிலத்திற்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அசாம் மாநிலம் சென்றுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அசாம் போலீஸ் கமாண்டோ பட்டாலியனின் முதல் பிரிவின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அணிவகுப்பை உள்துறை மந்திரி அமித் ஷா ஏற்றுக் கொண்டார்.
பின்னர் பேசும்போது அவர் கூறியதாவது:-
இந்தியா- மியான்மர் எல்லை வங்காளதேசம் எல்லை போன்று பாதுகாக்கப்படும். மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு எளிதாக நுழைவதை (எந்தவித விசா போன்று நடைமுறை பின்பற்றமாமல் இந்தியாவுக்கு வரும் அனுமதி) இந்திய அரசு தடுத்து நிறுத்தும்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் அரசு வேலைக்கு மக்கள் லஞ்சம் வழங்க வேண்டியிருந்தது. ஆனால், பா.ஜனதா ஆட்சியில் ஒரு பைசா கூட வழங்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
550 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோவில், ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையான விசயம்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.