இந்தியா

குழந்தைகளின் விடுமுறை வீட்டுப்பாடம் குறித்து பெண்ணின் புகார் வீடியோ

Published On 2024-07-03 03:55 GMT   |   Update On 2024-07-03 03:55 GMT
  • வீடியோ 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியது.
  • வீடியோவை பார்த்த பெண்கள் பலரும், இது உண்மை என பதிவிட்டுள்ளனர்.

ஒரு பெண் தனது குழந்தையின் விடுமுறை வீட்டுப்பாடம் குறித்து புகார் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் எமினன்ட் வோக் என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 33 வினாடிகள் ஓடுகிறது.

விடுமுறை நாட்களில் தனது குழந்தைக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுப்பாடம் மற்றும் திட்டங்களின் அளவு குறித்து கோபம் அடைந்த அந்த பெண் வீடியோவில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள் உண்மையில் அவர்களின் பெற்றோர்களால் பணிகள் செய்து முடிக்கப்படும் என்று ஆசிரியர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அவர்கள் பெற்றோரை தொந்தரவு செய்ய வேண்டும் என்றே இதை செய்கிறார்கள். இது எங்கள் விடுமுறையையும் பாழாக்குகிறது. குழந்தைகளால் இதுபோன்ற பணிகளை செய்ய முடியாது என்பதை ஆசிரியர்கள் அறிவார்கள். இறுதியில் பெற்றோர்கள் அவற்றை செய்து முடிக்க வேண்டும். குழந்தைகள் விளையாடி கொண்டிருக்கும் போது அவர்களின் வீட்டுப்பாடங்களை நாங்கள் செய்கிறோம். பெற்றோர்களை ஈடுபடுத்துவதற்கு பதிலாக குழந்தைகளால் செய்யக்கூடிய வீட்டுப்பாடங்களை அவர்களுக்கு வழங்குமாறு ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அவரது இந்த வீடியோ 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியது. வீடியோவை பார்த்த பெண்கள் பலரும், இது உண்மை என பதிவிட்டுள்ளனர். ஒரு பயனர், நான் கல்வி அமைச்சராக இருந்தால் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லை என்பதை உறுதிசெய்வேன் என கூறியுள்ளார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News