செய்திகள்

அந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும், அதனால் தான் அப்படி செய்றேன் - ஷிகர் தவான்

Published On 2018-06-04 00:27 GMT   |   Update On 2018-06-04 00:27 GMT
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டிரேடு மார்க் ஸ்டைல் கொண்டாட்டத்தின் பின்னணி குறித்து தெரிவித்துள்ளார். #ShikharDhawan #gabbarstylecelebration

புதுடெல்லி: 

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். இந்திய அணியில் சில காலம் பார்ம் இல்லாமல் தவித்து வந்த இவர், மீண்டும் வாய்ப்பு பெற்று அணியில் இடத்தை பிடித்தார். 

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய இவர் சிறப்பாக செயல்பட்டார். அவரது தொடையை தட்டும் டிரேடு மார்க் ஸ்டைல் கொண்டாட்டத்துக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதை வைத்து தான் அவருக்கும் கப்பார் தவான் என்னும் புனைப்பெயர் கிடைத்தது.



இந்நிலையில் தவான் தனது டிரேடு மார்க் கொண்டாட்டத்தின் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் கூறுகையில், எனக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடிக்கும். அதனால் தான் எனது மகிழ்ச்சியை எப்போதும் அந்த ஸ்டைலில் (தொடையை தட்டி) கொண்டாடுகிறேன். முதலில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு போட்டியின்போது கேட்ச் பிடித்து வாட்சனை ஆட்டமிழக்க செய்த போது அவ்வாறு செய்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அதுவும் பவுண்டரி கோட்டுக்கு அருகே நிற்கும் போது எனது அந்த ஸ்டைலை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள், என்றார். #ShikharDhawan #gabbarstylecelebration


Tags:    

Similar News