செய்திகள்

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணித் தேர்வு கேலிக்கூத்தானது: வார்னே ஆவேசம்

Published On 2019-01-04 11:51 GMT   |   Update On 2019-01-04 11:51 GMT
உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் தேர்வு கேலிக்கூத்தானது என்று வார்னே ஆவேசமடைந்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது சிறந்த அணியைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசில்வுட், ஆர்கி டி'ஷார்ட் போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்டாமல் பீட்டர் சிடில், கவாஜா, நாதன் லயன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு கேலிக்கூத்தானது என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து வார்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் பெயரை அறிவித்ததை பார்த்தேன். சில வீரர்களை நீக்கியதும், சேர்த்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தேர்வு செய்ததில் எந்த அர்த்தமும் இல்லை. இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News