கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்ட்: வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

Published On 2024-10-31 11:54 GMT   |   Update On 2024-10-31 11:54 GMT
  • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
  • 2-வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸட் வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் நடைபெற்றது.

கடந்த 29-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டோனி டி ஜோர்ஜி 177 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களும், முல்டர் 105 ரன்களும் விளாச முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடாவின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 38 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 159 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் பேட்டர்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனதால் வங்கதேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு தென்ஆப்பிரிக்கா கேட்டுக்கொண்டது.

2-வது இன்னிங்சில் மகாராஜ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 143 ரன்னில் சுருண்டது. மகாராஜ் 5 விக்கெட்டும், முத்துசாமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால் தொடரை 2-0 என கைப்பற்றியது.

Tags:    

Similar News