ஐபிஎல் தொடரில் எங்களுக்கு அணுமதி இல்லை.. வைரலாகும் வாசிம் அக்ரம் வீடியோ
- 2008 முதல் ஐபிஎல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.
- சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரில் எங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் வர்ணனையின் போது பேசியது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
2008 முதல் ஐபிஎல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்கள் நடைபெற்றது. முதல் சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையேயான உறவு மோசமானதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் வர்ணனையின் போது ஆஸ்திரேலிய வர்ணனையாளர் ஐபிஎல் தொடரை பற்றி பேசினார். அப்போது அருகே இருந்த வாசிம் அக்ரம், தான் ஐபிஎல் தொடரில் இருந்து நீண்ட தூரம் விலகி வந்து விட்டதாக கூறினார்.
அதற்கு வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் "ஏன்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு வாசிம் அக்ரம், "எங்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லை." என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.