கிரிக்கெட் (Cricket)

ஜடேஜாவுக்கு தொடர்ந்து ஓய்வு, முகமது சிராஜ் அவுட்: துலீப் டிராபி அப்டேட்

Published On 2024-08-27 09:24 GMT   |   Update On 2024-08-27 09:24 GMT
  • இந்திய அணி வீரர்கள் துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தல்.
  • சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக செயல்படுகின்றனர்.

இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. தொடக்க சுற்று போட்டி செப்டம்பர் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வீரர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது. ரோகித் சர்மா, பும்ரா, விராட் கோலி ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் உடல்நலம் சரியில்லாத காரணத்தில் முகமுது சிராஜ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உம்ரான் மாலிக்கும் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா "பி" அணியில் இடம் பிடித்திருந்த ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜடேஜா தேசிய அணிக்காக விளையாடவில்லை. இலங்கை தொடரின்போதும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ரஞ்சி டிராபியில் விளையாடி 41 விக்கெட்டுகள் கைப்பற்றிய யாதவ் இடம் பிடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரி அணிக்காக விளையாடினார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார்.

இந்தியா "ஏ" அணிக்கு சுப்மன் கில்லும், "பி" அணிக்கு அபிமன்யு ஈஸ்வரனும், இந்தியா "சி" அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட்டும், "டி" அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யரும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர்.

Similar News