சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் அதிக ரன்: வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- ஜெய்ஸ்வால் 10 இன்னிங்சில 755 ரன்கள் குவித்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்கள் அடித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனால் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடிக்கவும், அஷ்வின் (102*)- ஜடேஜா (86*) ஜோடி அபாரமாக விளையாடவும் இந்தியா சரிவில் இருந்து மீண்டு முதல் நாள் ஆட்ட முடிவில் 80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்துள்ளது.
ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடித்ததன் மூலம் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் குவித்தவர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ஜெய்ஸ்வால் 755 ரன்கள் விளாசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானின் ஜாவித் மியான்தத் 743 ரன்கள் அடித்துள்ளார். ஜிம்பாப்வேயின் டேவ் ஹக்டன் 687 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவ் ரிச்சர்ட்சன் 680 ரன்களும் அடித்துள்ளனர்.