9 ஆண்டுக்கு பிறகு டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்த இந்தியா
- வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.
- இந்திய மண்ணில் 9 ஆண்டுக்கு பிறகு இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் நடைபெற்று வருகிறது. கான்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ரோகித் சர்மா அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே அணியை வைத்து விளையாடுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம் இந்திய மண்ணில் 9 ஆண்டுக்கு பிறகு இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
2015-ம் ஆண்டு பெங்களூரு மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். அதற்கு பின்பு இப்போதுதான் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.