கிரிக்கெட் (Cricket)
இந்தியா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்திய அணி
- பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.
- இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் மோதுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை இந்திய அணி தற்போது ரத்து செய்துள்ளது. மேலும் இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் வலை பயிற்சியை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.