முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எவின் லூயிஸ் 96 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதனால் இங்கிலாந்து அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் லிவிங்ஸ்டன் 48 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மோட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஓவர் குறைக்கப்பட்டது. 35 ஓவரில் 157 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது.
தொடர்ந்து விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி 25.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 157 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.