கிரிக்கெட் (Cricket)

வீடியோ: சுந்தர் சுழலில் சிக்கிய நியூசிலாந்து- முதல் நாள் உணவு இடைவேளை வரை 92/3

Published On 2024-11-01 06:34 GMT   |   Update On 2024-11-01 06:34 GMT
  • வில்யங் 38 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
  • இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தார் 2 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மும்பை:

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேடிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் இடம் பெற்றார். நியூசிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டது.

2-வது டெஸ்ட் போட்டியில் அசத்திய சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அதேபோல் வேகப்பந்து வீச்சார் டிம் சவுத்தியும் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக மேட் ஹென்றி, சோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம்லாதம், கான்வே களம் இறங்கினார்கள். ஆகாஷ்தீப் பந்தில் கான்வே 4 ரன்னில் ட.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வில்யங் களம் வந்தார்.

இதனையடுத்து விக்கெட் விழாததால் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை கேப்டன் ரோகித் பந்து வீச அழைத்தார். அடுத்த சிறிது நேரத்தில் சுந்தர் பந்து வீச்சில் லாதம் (24 ரன்) போல்ட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா வந்த வேகத்தில் சுந்தர் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தார் 2 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.



Tags:    

Similar News