இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பதிரனா, மதுஷங்கா விலகல்
- இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.
- பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.
இலங்கை சென்று இருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்றுள்ளது.
இதைதொடர்ந்து, இலங்கையில் உள்ள ஆர்பிஎஸ்சி மைதானத்தில் நாளை இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியின்போது மதுஷங்காவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.
3வது டி20 போட்டியில் கேட்ச் பிடிக்க டைவிங் செய்யும்போது பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.
இதனால், செவ்வாயன்று பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பதிரனா பந்துவீசவில்லை.
மேலும், காயம் அடைந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், குசல் ஜனித், பிரமோத் மதுஷன் மற்றும் ஜெப்ரி வான்டர்சே ஆகியோர் அணியில் காத்திருப்பு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.