ஐபிஎல் 2025: ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் - ஜெய் ஷா
- ஐபிஎல் அணிகளுக்கு ரூ.12.60 கோடி போட்டி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த வருட ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் எனவும் 1 முறை ஆர்.டி எம் கார்டு வைத்து வீரரை மீண்டும் வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் கட்டணம் தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ரூ.12.60 கோடி போட்டி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.