null
சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை.. பாகிஸ்தான் கேப்டனை சாடிய ரமீஷ் ராஜா
- முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது.
- ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும்.
வங்கதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சொந்த மண்ணில் வங்கதேசம் அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்துக்கு முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் உகூறியதாவது:-
முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது. நீங்கள் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் இருந்தீர்கள். இரண்டாவதாக நம்முடைய வேக பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் நற்பெயர் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த தோல்வியை ஒரு நம்பிக்கை மீது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஆகும். இந்திய அணி ஆசியக் கோப்பையின் கடந்த ஆசியக் கோப்பையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் பலவீனத்தை வெளியில் காட்டிவிட்டது. இப்போது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
நம்முடைய வேகப்பந்துவீச்சாளர்களின் வேகம் குறைந்து விட்டது. 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் வங்கதேசம் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை விட சிறப்பாக இருந்தார்கள். ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும். ஷான் மசூத் தற்பொழுது கேப்டனாக தோல்வியில் இருக்கிறார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோற்றுப் பொழுது சூழ்நிலை கடுமையாக இருந்தது என்று நினைத்தேன். பாகிஸ்தான் அணி அங்கு தொடரை வெல்வது சாத்தியம் கிடையாது. ஆனால் நீங்கள் இப்பொழுது சொந்த நாட்டில் வங்கதேசம் அணிக்கு எதிராக தோற்று இருக்கிறீர்கள். கேப்டனாக ஷான் மசூத் கண்டிஷனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.
மேலும் பிஎஸ்எல் மற்றும் கவுண்டி போட்டிகளில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ராவல்பிண்டி ஆடுகளத்தில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? என்று கூறியிருக்கிறார்.