கிரிக்கெட் (Cricket)

ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு

Published On 2024-08-19 01:36 GMT   |   Update On 2024-08-19 01:36 GMT
  • பெண்கள் உலகக் கோப்பையை மலேசியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளில் ஒன்றான சமோவா முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது.

துபாய்:

2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 18-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை மலேசியாவில் 4 இடங்களில் நடக்கிறது. பெண்கள் உலகக் கோப்பையை மலேசியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளில் ஒன்றான சமோவா முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது.

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு முன்னேறும். நடப்பு சாம்பியன் இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம்பிடித்திருக்கிறது. இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, மலேசியா ஆகியவை மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை ஜன.19-ந் தேதி சந்திக்கிறது.

தொடர்ந்து 21-ந்தேதி மலேசியாவுடனும், 23-ந்தேதி இலங்கையுடனும் மோதுகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி 'டி' பிரிவிலும், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் 'பி' பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன.

Tags:    

Similar News