கிரிக்கெட் (Cricket)

ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி அபாரம்.. முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை குவித்த நியூசிலாந்து

Published On 2024-10-18 08:13 GMT   |   Update On 2024-10-18 08:13 GMT
  • இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும்ம்,டிம் சௌதி 65 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறது. 

Tags:    

Similar News