கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பையில் சாய் சுதர்சன் இரட்டை சதம்: முதல் நாள் முடிவில் தமிழகம் 379 ரன்கள் குவிப்பு

Published On 2024-10-18 21:07 GMT   |   Update On 2024-10-18 21:07 GMT
  • தமிழகம், டெல்லி இடையிலான போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
  • முதல் நாளில் தமிழகம் 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன் எடுத்தார்.

புதுடெல்லி:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் டெல்லியில் இன்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் முதல் நாள் முடிவில் தமிழகம் 88 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News