கிரிக்கெட் (Cricket)

சர்பராஸ் சதம் அடித்தால் அது பெரிய சதம் தான்.. 99 ரன்களில் அவுட்டான பண்ட்

Published On 2024-10-19 09:59 GMT   |   Update On 2024-10-19 09:59 GMT
  • தனது முதல் டெஸ்ட் சதத்தையும் 150 ரன்களாக சர்பராஸ் மாற்றியுள்ளார்.
  • சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 99 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் களமிறங்கிய சர்பராஸ் கான் ரிஷப் பண்ட் உடன் கூட்டணி அமைத்து ஆடினார். இதில் இதில் சர்பராஸ் கான் 110 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் ஸ்கோர் செய்த முதல் சதம் இதுவாகும். இதன் மூலம் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி அடுத்த இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.

சதம் விளாசிய பின்பு நிதானமாக விளையாடிய சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து அவுட்டானார்.

முதல்தர கிரிக்கெட்டில் 15 சதங்களை சர்பராஸ் கான் அடித்துள்ளார். சதம் அடித்த பின்பு உடனடியாக தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் பெரிய ரன்கள் அடிப்பதை சர்பராஸ் வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வகையியில் அண்மையில் நடந்த இரானி கோப்பையிலும் தனது சதத்தை இரட்டை சதமாக அவர் மாற்றினார். அவ்வகையில் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் 150 ரன்களாக சர்பராஸ் மாற்றியுள்ளார்.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் எடுத்து இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை எடுத்துள்ளது. களத்தில் கே.எல்.ராகுலும் ஜடேஜாவும் உள்ளனர்.

Tags:    

Similar News