கிரிக்கெட் (Cricket)

டி20-யில் அதிக தொடர் நாயகன் விருது: 3 வீரர்களுடன் 2-வது இடத்தை பகிர்ந்த சூர்யகுமார்

Published On 2024-07-31 16:22 GMT   |   Update On 2024-07-31 16:22 GMT
  • இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியது.
  • கடைசி போட்டியில் ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தரும், இத்தொடரின் தொடர் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் டேவிட் வார்னர் மற்றும் பாபர் அசாம் ஆகியோரது சாதனைகளை சமன்செய்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 7 முறை கைப்பற்றி முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் தலா 5 முறை தொடர் நாயகன் விருதை வென்று ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் பாபர் அசாம், வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இரண்டாம் இடத்திக் நீடித்து வந்த நிலையில், தற்சமயம் இந்திய அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் 5 முறை தொடர் நாயகன் விருதை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள்:-

விராட் கோலி - 07 முறை

சூர்யகுமார் யாதவ் - 05 முறை

பாபர் அசாம் - 05 முறை

டேவிட் வாரினர் - 05 முறை

ஷாகிப் அல் ஹசன் - 05 முறை

Tags:    

Similar News