ரஞ்சிக் கோப்பையில் ஜெகதீசன் அதிரடி: வெற்றியின் விளிம்பில் தமிழக அணி
- முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
புதுடெல்லி:
ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் தமிழக அணியும், சவுராஷ்டிரா அணியும் கோயம்புத்தூரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வசவடா 62 ரன் எடுத்தார்.
ஜிராங் ஜெனி 34 ,ஷெல்டோன் ஜாக்சன் மற்றும் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் தலா 21 ரன்களை எடுத்ததனர்.
தமிழக அணி சார்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் 82, ஜெகதீசன் 100, புரதோஷ் பௌல் 49, இந்திரஜித் 40 என ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26 ரன்களை எடுத்தனர்.
இறுதியில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 164 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. சவுராஷ்டிரா அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தமிழக அணி சார்பில் குஜ்ராப்னீட் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.