கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பிய வங்காளதேச முன்னணி வீரர்

Published On 2024-08-11 15:12 GMT   |   Update On 2024-08-11 15:13 GMT
  • வங்காளதேச அணி பாகிஸ்தானில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
  • பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

டாக்கா:

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமது உள்ளிட்ட வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

காயம் காரணமாக கடந்த 12 மாதத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் வங்காளதேச அணிக்கு வலு சேர்க்கும்.

வங்காளதேச டெஸ்ட் அணியின் விவரம் வருமாறு:

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹமுதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ரானா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது

Tags:    

Similar News