கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி

Published On 2024-09-12 19:49 GMT   |   Update On 2024-09-12 19:49 GMT
  • முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 19-ம் தேதி தொடங்குகிறது.
  • சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 58 ரன்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.

மும்பை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26,942 ரன்கள் குவித்துள்ளார். இந்தத் தொடரில் கோலி 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.

இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News