கிரிக்கெட் (Cricket)

மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2024-10-10 16:52 GMT   |   Update On 2024-10-10 16:52 GMT
  • முதலில் ஆடிய வங்கதேசம் 103 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி பெற்றது.

ஷார்ஜா:

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிகர் சுல்தானா அதிகமாக 39 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரீஷ்மா 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்தார்.

நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

Tags:    

Similar News