கிரிக்கெட் (Cricket)
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றம்?
- இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- இதனால் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருக்கிறது.
மும்பை:
20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை இருக்கிறது.
இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தனர். இதை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார்.
இந்த நிலையில் வங்காளதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப் படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய 3 இடங்கள் உள்ளன.
இதனால் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருக்கிறது. இலங்கை, ஜிம் பாப்வே நாடுகளும் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவதற்கான போட்டியில் உள்ளன.