விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது இந்தியா

Published On 2024-09-08 12:17 GMT   |   Update On 2024-09-08 12:17 GMT
  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் இன்று தொடங்கியது.
  • முதல் போட்டியில் சீனாவை இந்தியா வீழ்த்தியது.

பீஜிங்:

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்கியது.

இத்தொடரில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சுக்ஜித் சிங், உத்தம் சிங், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

நாளை இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News