விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் 8-வது சுற்றிலும் வெற்றி: தங்கத்தை நெருங்கும் இந்திய ஆண்கள் அணி

Published On 2024-09-19 20:33 GMT   |   Update On 2024-09-19 20:33 GMT
  • 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
  • இன்று நடந்த 8-வது சுற்றிலும் இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி பெற்றது.

புடாபெஸ்ட்:

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 8-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, ஈரானைச் சந்தித்தது.

இதில் அர்ஜூன் எரிகெசி, குகேஷ் மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் ஈரான் வீரர்களை தோற்கடித்தனர். பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

இறுதியில் இந்தியா 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி தொடர்ந்து 8-வது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்திய மகளிர் அணி போலந்துடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

11 சுற்றுகள் கொண்ட 8 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயம் தங்கம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News